கலைஞரின் 101வது பிறந்தநாள் - நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

M K Stalin M Karunanidhi Tamil nadu DMK
By Swetha Jun 03, 2024 02:34 AM GMT
Report

இன்று திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் 101ஆவது பிறந்த நாள்.

கலைஞர் பிறந்தநாள்

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் தவிர்க்கவே முடியாத தலைவர் என்றால் அது கலைஞர் கருணாநிதி தான். இவர் சுமார் 18 ஆண்டுகள் தமிழக முதல்வராகவும் இருந்துள்ளார். இன்றளவிலும் தமிழ்நாடு இவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் அதில் கலைஞர் கருணாநிதிக்கு முக்கிய பங்கு உள்ளது.

கலைஞரின் 101வது பிறந்தநாள் - நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை! | Karunanidhi 101St Birthday Today

ஜூன் 3ம் தேதியான இன்று அவரது 101ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. வழக்கமாகக் கருணாநிதி பிறந்த நாளை திமுகவினர் வெகு சிறப்பாகக் கொண்டாடுவார்கள். இந்த நிலையில், கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்.

இது கலைஞரின் சமாதி அல்ல.. சன்னதி - நினைவிடத்தை பார்த்து பிரமித்த நடிகர் வடிவேலு!

இது கலைஞரின் சமாதி அல்ல.. சன்னதி - நினைவிடத்தை பார்த்து பிரமித்த நடிகர் வடிவேலு!

ஸ்டாலின் மரியாதை

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 101-வது பிறந்த நாள் திமுக சார்பில் கொண்டாடப்படுகிறது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் காலை 9 மணிக்குச் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார்.

கலைஞரின் 101வது பிறந்தநாள் - நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை! | Karunanidhi 101St Birthday Today

பின்னர் 9.15 மணி சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கும், 9.30 மணிக்குச் சென்னை கோடம்பாக்கம் முரசொலி வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கும் மற்றும் சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்" இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.