பேனா நினைவு சின்னம் : 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி
பேனா நினைவு சின்னம் சில நிபந்தனைகளுடன் மத்திய அரசின் நிபுணர் மதிப்பீடு குழு அனுமதி கொடுத்துள்ளது.
பேனா நினைவுசின்னம்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியது .இந்த நிலையில் பேனா நினைவு சின்னம் சில நிபந்தனைகளுடன் மத்திய அரசின் நிபுணர் மதிப்பீடு குழு அனுமதி கொடுத்துள்ளது.
15 நிபந்தனைகள்
அதன்படி கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது. திட்டத்தை செயல்படுத்தும் போது நிபுணர் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். கடலோர பாதுகாப்பு மண்டல விதிகளுக்கு உட்பட்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் உள்பட 15 நிபந்தனைகளையும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு விதித்துள்ளது.