இது கலைஞரின் சமாதி அல்ல.. சன்னதி - நினைவிடத்தை பார்த்து பிரமித்த நடிகர் வடிவேலு!

M Karunanidhi Tamil nadu Chennai Vadivelu
By Jiyath Mar 04, 2024 06:51 AM GMT
Report

உலகத் தமிழர்கள் அனைவரும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தை பார்க்க வேண்டும் என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

கலைஞர் நினைவிடம் 

சென்னை மெரினாவில் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. மேலும், பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டது.

இது கலைஞரின் சமாதி அல்ல.. சன்னதி - நினைவிடத்தை பார்த்து பிரமித்த நடிகர் வடிவேலு! | Actor Vadivelu About Karunanidhi Memorial

இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்நிலையில் கருணாநிதி நினைவிடம் மற்றும் அருங்காட்சியகத்தை நடிகர் வடிவேலு பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "இந்த நினைவிடத்தை பார்த்து நான் வியப்படைந்தேன்.

90 வயதில் பரதம் ஆடிய வைஜெயந்திமாலா; ஆச்சரியத்தில் ரசிகர்கள் - வைரல் Video!

90 வயதில் பரதம் ஆடிய வைஜெயந்திமாலா; ஆச்சரியத்தில் ரசிகர்கள் - வைரல் Video!

வடிவேலு நிகழ்ச்சி 

இது கலைஞர் அய்யாவின் சமாதி அல்ல. இது அவரது சன்னதி. இதை பார்க்க இரண்டு கண்கள் போதாது. அவரது வாழ்க்கை முறை தொடங்கி அரசியல் போராட்டம் வரையில் கடந்து வந்த அனைத்தையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

இது கலைஞரின் சமாதி அல்ல.. சன்னதி - நினைவிடத்தை பார்த்து பிரமித்த நடிகர் வடிவேலு! | Actor Vadivelu About Karunanidhi Memorial

மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. அவரது ஏஐ வடிவத்துடன் அமர்ந்து பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒவ்வொரு திமுக தொண்டருக்கும் இதுதான் குலதெய்வ கோயில். இது மணிமண்டபம் அல்ல மணிமகுடம். உலகத் தமிழர்கள் அனைவரும் இதை பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.