90 வயதில் பரதம் ஆடிய வைஜெயந்திமாலா; ஆச்சரியத்தில் ரசிகர்கள் - வைரல் Video!

Jiyath
in பிரபலங்கள்Report this article
90 வயதில் பரதநாட்டியம் ஆடிய நடிகை வைஜெயந்திமாலாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
வைஜெயந்திமாலா
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட்டது. இதனையடுத்து 26-ம் தேதி ‘ராக சேவா’ என்ற இசை நிகழ்ச்சி தொடங்கியது.
தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் மூத்த நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான வைஜெயந்திமாலாவின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் சமீபத்தில் நடைபெற்றது.
குவியும் வாழ்த்து
இதில் அவர் சிறப்பாக பரதநாட்டியம் ஆடினார். 90 வயதாகும் வைஜெயந்திமாலாவின் நாட்டியத்தை கண்டு ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், இந்த வயதிலும் அவர் பரதநாட்டியம் ஆடியதற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. வைஜெயந்திமாலாவுக்கு சமீபத்தில் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
90 वर्ष की अभिनेत्री वैजयंती माला ने Ram Mandir अयोध्या में अपनी खास प्रस्तुति दी है. देखें वीडियो #Vyjayanthimala #Ayodhya #RamMandir #uttarpradesh pic.twitter.com/ib5zgdU7ae
— Khushbu_journo (@Khushi75758998) March 1, 2024