கலைஞர் நினைவிடம்; தலைவனுக்கு தொண்டன் கட்டிய தாஜ்மஹால் - வைரமுத்து உருக்கம்!

M Karunanidhi Chennai Vairamuthu
By Swetha Feb 26, 2024 07:11 AM GMT
Report

கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்றிருந்த கவிஞர் வைரமுத்து தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

கலைஞர் நினைவிடம்

கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், சென்னை மெரினாவில் ரூ.39 கோடியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி, பொதுப்பணித்துறை சார்பில் கருணாநிதி நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது. பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

karunanithi memorial

புதிதாக அமைக்கப்பட்ட கருணாநிதி நினைவிடம் மற்றும் புதுப்பிக்கபட்ட அண்ணா நினைவிடம் ஆகியவற்றை இன்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

மேலும், இந்த நினைவிடத்தில் பல்வேறு வசதிகளுடன் பல சிறப்பம்சங்களை கொண்டுக் கட்டப்படுள்ளது. மேலும் இதில், கலைஞர் உலகம் என்ற டிஜிட்டல் அருங்காட்சியகம், கலைஞருடன் ஒரு செல்பி’ என்ற அரங்கம், கலைஞரின் சிந்தனை சிதறல்கள் கொண்ட அறை, உரிமை வீரர் கலைஞர் என்ற ஒரு அறையில் கருணாநிதி உரையாற்றுவது போன்ற காட்சி அமைப்பு 3 டி தொழில்நுட்பத்துடன் இடம் பெற்றுள்ளது. 

அதனால் தான் அங்கு அடிக்கடி செல்கிறேன் - கலைஞர் குறித்து மு.க.ஸ்டாலின் உருக்கம்

அதனால் தான் அங்கு அடிக்கடி செல்கிறேன் - கலைஞர் குறித்து மு.க.ஸ்டாலின் உருக்கம்

வைரமுத்து

இந்நிலையில், கருணாநிதி நினைவிடத்திற்கு சென்றிருந்த கவிஞர் வைரமுத்து அவரது அனுபவங்களை x தளத்தில் பகிர்ந்துகொண்டார். 

கலைஞர் நினைவிடம்; தலைவனுக்கு தொண்டன் கட்டிய தாஜ்மஹால் - வைரமுத்து உருக்கம்! | Karunanidhi Memorial Poet Vairamuthu Post

கலைஞர் நினைவிடம்

கண்டு சிலிர்த்தேன்

கலைஞரின்

கையைப் பிடித்துக்கொண்டே

கலைஞர் நினைவிடம்

சுற்றிவந்த உணர்வு

இது தந்தைக்குத்

தனயன் எழுப்பிய மண்டபமல்ல

தலைவனுக்குத்

தொண்டன் கட்டிய தாஜ்மஹால்

"இப்படியோர் நினைவிடம்

வாய்க்குமென்றால்

எத்தனை முறையும் இறக்கலாம்"

கலைஞர் கண்டிருந்தால்

கவிதை பாடியிருப்பார்

உருவமாய் ஒலியாய்

புதைத்த இடத்தில்

கலைஞர் உயிரோடிருக்கிறார்

உலகத் தரம்

நன்றி தளபதி

என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.