அப்பா - மகன் பாசமே கிடையாது; மனசு கஷ்டமாக இருக்கும் - மனம் திறந்த கார்த்திக் ராஜா!
தனது தந்தை இளையராஜா குறித்து, அவரது மகன் கார்த்திக் ராஜ மனம் திறந்து பேசியுள்ளார்.
இளையராஜா
இந்திய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. 'அன்னக்கிளி' என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், இதுவரை 1000 படங்களுக்கும் மேல் அவர் இசையமைத்துவிட்டார்.
கடைசியாக இளையராஜா இசையமைப்பில் சாமானியன் திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தனது தந்தை இளையராஜா குறித்து அவரது மகன் கார்த்திக் ராஜ மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது "நான் அம்மா பிள்ளை தான். ஆனால் அப்பா மீது ரொம்பவே மரியாதை உண்டு.
கஷ்டமா இருக்கும்
அப்பா வீட்டிலேயே எங்களுடன் பேசுவது ரொம்பவே அரிதான விஷயம் தான். மற்ற வீடுகளைப் போல அப்பா - மகன் பாசமெல்லாம் இங்கே அதிகம் கிடையாது. அப்பா எங்களுடன் பேசுவதையே நாங்கள் பெருமையாக நினைப்பது உண்டு.
அதேபோல் நாங்கள் இசையமைப்பதை அப்பாவிடம் போட்டுக் காட்ட மாட்டோம். எதாவது நல்லா இல்லையென்றால் 'ச்சீ.. த்தூ'..' என துப்பி விடுவார். அப்போது தான் மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கும்" என்று கார்த்திக் ராஜா உருக்கமாக பேசியுள்ளார்.