இதனால் தான் அஜித் வேண்டாம்னு விஜய்யை செலக்ட் பண்ணேன் - போட்டுடைத்த சங்கீதா!
அஜித்தின் காதல் கோட்டை படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது குறித்து நடிகை சங்கீதா பேசியுள்ளார்.
நடிகை சங்கீதா
'என் ரத்தத்தின் ரத்தமே' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சங்கீதா. தொடர்ந்து இதயவாசல், கேப்டன் மகள், மகாநதி, எல்லாமே என் ராசாதான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
மேலும், ' பூவே உனக்காக' என்ற படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அந்த படத்தில் இவரின் குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்தது. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் சங்கீதா நடித்துள்ளார். ஆனால், திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
காதல் கோட்டை
நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சங்கீதா, நடிகர் அஜித்தின் 'காதல் கோட்டை' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது " பூவே உனக்காக திரைப்படம் பெரிய அளவில் எனக்கு வெற்றியை கொடுத்தது.
இந்த திரைப்படத்திற்கான வாய்ப்பு வரும்போது அஜித் நடிப்பில் வெளியான 'காதல் கோட்டை' திரைப்படத்திலும் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. இரண்டும் ஒரே நேரத்தில் வந்ததால் எனக்கு எதை செலக்ட் செய்வது என்பது முதலில் குழப்பமாக இருந்தது.
ஆனாலும் நான் இயக்குநர் விக்ரமனுக்காக. பூவே உனக்காக திரைப்படத்தை செலக்ட் செய்தேன். ஆனால் காதல் கோட்டை படத்திலும் நான் நடிக்கவில்லையே என்பது எனக்கு வருத்தம் தான்" என்று பேசியுள்ளார்.