மனிதாபிமான கொலை.. ஸ்ரேயா கோஷல் கிட்ட அப்படி நடந்துக்கிட்டாரு இளையராஜா - விளாசிய பிரபலம்!
இசையமைப்பாளர் இளையராஜா குறித்து ஜேம்ஸ் வசந்தன் பேசியுள்ளார்.
ஜேம்ஸ் வசந்தன்
சுப்பிரமணியபுரம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். தொடர்ந்து பசங்க, ஈசன், புத்தகம், விழா, சண்டமாருதம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
கடைசியாக இவரது இசையமைப்பில் அரியவன் என்ற படம் வெளியாகியிருந்தது . ஜேம்ஸ் வசந்தன் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் இசையமைப்பாளர் இளையராஜா குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் "இளையராஜா இசை நிகழ்ச்சியில் பாடகி ஸ்ரேயா கோஷல் "காற்றில் எந்தன் கீதம்" பாடலை பாடினார்.
அப்போ.. அந்த பாட்டில் காணாத ஒன்றை தேடுதே'னு பாட்றதுக்கு பதிலா தோடுதே'னு பாடிட்டாங்க. அப்போ மைக்ல ராஜா சார் ஒன்னு சொல்லி அந்த பாடகிய எப்படி அவமானப்படுத்தினாருனு தெரியுமா. 'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' அப்படினு அவங்கள இவரு விமர்சிக்கிறாரு.
மனிதாபிமான கொலை
அப்போ அங்க இருந்த ஆடியன்ஸ் எல்லாரும் கைத்தட்டி பாராட்டுறாங்க. ஏன்னா.. எல்லாரும் இளையராஜா ரசிகர்கள். இன்னைக்கு அவரு தான் ஹீரோ. அவரு எது பேசுனாலும் எடுபடும்ல.
இது எவ்வளவு பெரிய மனிதாபிமான கொலை. ஸ்ரேயா கோஷல் ஒரு பெங்காளி. ஹிந்தி பாடல்கள் பாடிட்டு இருக்காங்க. அப்போ.. காணாத ஒன்றை தோடுதே'னு பாடினா அது யாருடைய தவறு. மேடையில் பாடவிட்டு மொழி தெரியாத ஒருத்தர தமிழ்ல ஜோக் சொல்லி கிண்டல் பண்ணலாமா. அந்த பொண்ணுக்கும் புரிஞ்சிருக்கணும்ல. இங்கிலிஷ்ல சொல்லுங்கா.. அவங்க தப்பா பாட்றாங்க திருத்திக்கணும்னு. அப்பவே திருத்தவே இல்லையே.
மொழி தெரியாத அவங்களுக்கு தமிழ்ல பேசி கிண்டல் பண்ற அளவுக்கு அநாகரிகமா நடந்துகிட்டாரு இவ்வளவு பெரிய இசையமைப்பாளர் இளையராஜா.. அன்னைக்கு மக்கள் பலருடைய மனதில் அவர் தரம் தாழ்ந்து போனார்" என்று தெரிவித்துள்ளார்.