மதம் மாறிய அஜித் பட இசையமைப்பாளர் - புதிய பெயர் என்ன தெரியுமா?

Tamil Cinema Actors Tamil Actors Tamil Actress
By Jiyath May 06, 2024 12:52 PM GMT
Report

இஸ்லாம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறிவிட்டதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.

ஜிப்ரான்

வாகை சூடவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். தொடர்ந்து வத்திக்குச்சி, திருமணம் எனும் நிக்காஹ், அமர காவியம், உத்தம வில்லன், பாபநாசம், தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன், துணிவு என இதுவரை 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மதம் மாறிய அஜித் பட இசையமைப்பாளர் - புதிய பெயர் என்ன தெரியுமா? | Music Director Ghibran Converted To Hindu

சமீபத்தில் வெளியான குரங்கு பெடல் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இஸ்லாம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

நஸ்ரியாவ கேக்காமலே கிஸ் பண்ணேன்; சூப்பர்னு பாராட்னாங்க - 53 வயது நடிகர் பகீர்!

நஸ்ரியாவ கேக்காமலே கிஸ் பண்ணேன்; சூப்பர்னு பாராட்னாங்க - 53 வயது நடிகர் பகீர்!

இந்து மதம் 

இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய ஜிப்ரான் "நான் சில காலம் இஸ்லாம் மதத்தை பின்பற்றி வந்தேன். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக மீண்டும் இந்து மதத்திற்கு மாறிவிட்டேன். சட்டப்பூர்வமாக எல்லா மாற்றங்களையும் செய்துவிட்டேன்.

மதம் மாறிய அஜித் பட இசையமைப்பாளர் - புதிய பெயர் என்ன தெரியுமா? | Music Director Ghibran Converted To Hindu

இதுவரை நான் இசையமைத்த படங்களில் ஜிப்ரான் என்கிற பெயரை போட்டு வந்தேன். ஆனால் குரங்கு பெடல் படத்தில் எனது அப்பாவின் பெயரோடு ஜிப்ரான் வைபோதா என்கிற பெயரை பயன்படுத்தியுள்ளேன். இதனால் இந்த படம் எனக்கு மனதிற்கு நெருக்கமான படம் ” என்று தெரிவித்துள்ளார்.