நஸ்ரியாவ கேக்காமலே கிஸ் பண்ணேன்; சூப்பர்னு பாராட்னாங்க - 53 வயது நடிகர் பகீர்!
நடிகை நஸ்ரியாவுடன் நடித்த அனுபங்களை குறித்து நடிகர் ஆடுகளம் நரேன் பேசியுள்ளார்.
ஆடுகளம் நரேன்
கடந்த 1997-ம் ஆண்டு வெளியான 'ராமன் அப்துல்லா' படத்தில் ஆடுகளம் நரேன் என அழைக்கப்படும் நாராயணன் (53) நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து தாயின் மணிக்கொடி, அறை எண் 305ல் கடவுள், அஞ்சாதே, ஒஸ்தி என பல படங்களில் நடித்தார்.
ஆனால், ஆடுகளம் படத்தில் நடித்ததன் மூலம் தான் இவர் பிரபலமானார். இதனையடுத்து நண்பன், சகுனி, பிட்சா, சுந்தர பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, ஆரம்பம், நய்யாண்டி, புலி, ரெமோ, பைரவா, அசுரன், 80-ஸ் பில்டப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஆடுகளம் நரேன் "நய்யாண்டி படத்தில் நஸ்ரியாவின் அப்பாவாக நடித்திருந்தேன்.
மன்னிப்பு கேட்டேன்
அந்த படத்தில் பாசமாக நஸ்ரியாவை கட்டிப்பிடித்து பேச வேண்டும். என்னை அறியாமல் அந்த காட்சியில் நஸ்ரியாவுக்கு முத்தம் கொடுத்து விட்டேன். எல்லாரும் அந்த சீன் ரொம்ப சூப்பரா வந்திருக்குன்னு பாராட்டினாங்க.
அதன் பின்னர் நஸ்ரியாவிடம் மன்னிப்பு கேட்டேன். கிஸ் பண்றது பிளான் பண்ணல, அனுமதி வாங்காம கொடுத்துட்டேன் என்றேன். நஸ்ரியா உடனே அவங்க அப்பாவை கூட்டிட்டு வந்து இது ரியல் அச்சன், நீங்க ரீல் அச்சன். அதெல்லாம் பிரச்சனை இல்லை என்றார். அவரை போல ஒரு சிறந்த நடிகையை நான் பார்த்ததில்லை" என்று தெரிவித்துள்ளார்.