அதெல்லாம் இன்னும் போகல;எனக்கு பயம் இருக்கு.. சுசியுடன் விவாகரத்து குறித்து முன்னாள் கணவர்!

Karthik Kumar Suchitra
By Sumathi Nov 11, 2023 02:30 PM GMT
Report

கார்த்திக், சுசித்ரா உடனான விவாகரத்து குறித்து பேசியுள்ளார்.

சுசித்ரா

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வந்தார் சுசித்ரா. ஆர்ஜே, பாடகி, நடிகை, எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர். நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்துக் கொண்டார். பின் சில வருடங்களுக்கு முன் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

karthik-kumar-about-divorce-with-suchitra

இந்நிலையில் கார்த்திக் அளித்த பேட்டி ஒன்றில், “ சுசித்ராவின் மீது எப்போதுமே எனக்கு அன்பு உண்டு. அவர் மிகவும் அழகான மனிதர். அவர் மிகவும் கஷ்டப்பட்டு, தன்னுடைய சினிமா வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.

தெருவுல மூஞ்சி காட்ட முடியாது.. இப்படியெல்லாமா பண்ணுவாங்க? - ஐஷுவை ரோஸ்ட் செய்த சுசித்ரா!

தெருவுல மூஞ்சி காட்ட முடியாது.. இப்படியெல்லாமா பண்ணுவாங்க? - ஐஷுவை ரோஸ்ட் செய்த சுசித்ரா!

விவாகரத்து

எனக்கு அவர் மீது அக்கறை இருக்கிறது. அவரது முயற்சிகளின் மீது எனக்கு மதிப்பு இருக்கிறது. எனக்கும் அவருக்கும் இடையே நடந்த மணமுறிவு நிச்சயமாக கஷ்டமாகத்தான் இருந்தது. இருப்பினும் அவர் மீது உள்ள அன்பு, அக்கறையெல்லாம் இன்னும் போகவில்லை.

suchithra with karthik

சுசி லீக்சை பொறுத்தவரை, அந்த பிரச்சினையில் எப்போதுமே உங்கள் வாழ்க்கையில் இக்கட்டான ஒரு சூழ்நிலை வந்து கொண்டே தான் இருக்கும். அதனுடன் ஒரு தைரியத்துடன் போராட வேண்டியது உங்களுடைய பொறுப்பு என்பதை தெரிந்து கொண்டேன்.

தைரியத்தில் எப்பொழுதுமே கஷ்டங்களும் இருக்கிறது. தைரியம் என்பது, உங்களுக்கு வலி இல்லாமல் காண்பிப்பது அல்ல. எனக்கு பயம் இருக்கிறது, வலி இருக்கிறது என்று சொல்லி, அதற்கும் ஒரு சின்ன இடம் கொடுத்து, அதை எதிர்கொள்வதுதான் தைரியம்." எனப் பேசியுள்ளார்.