இரண்டாவது மனைவியுடன் சுச்சியின் முன்னாள் கணவர் செய்த செயல்...! - ஷாக்கான ரசிகர்கள்
பாடகி சுசித்ரா
தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வந்தார் சுசித்ரா. இவர் ஆர்ஜே, பாடகி, நடிகை, எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர். பல படங்களுக்கு சூப்பர் டூப்பர் பாடல்களை பாடியுள்ளார் சுசித்ரா.
ஆனால், சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டதால் பெரும் சர்ச்சையில் சிக்கினார் சுசித்ரா. இதனையடுத்து, சுச்சிக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. சினிமாவில் இவர் நட்பு வட்டாரத்தால் ஓரங்கட்டப்பட்டார்.
விவாகரத்து
பல ஆண்டுகளுக்கு முன்னர் பாடகி சுசித்ராவை திருமணம் செய்துக் கொண்டார் கார்த்திக் குமார். இவர் அலைபாயுதே, யாரடி நீ மோகினி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பின்னர் சில வருடங்களுக்கு முன் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இதனையடுத்து, நடிகர் கார்த்திக் குமார், நடிகை அம்ருதா ஸ்ரீனிவாசனை 2வதாக திருமணம் செய்துக் கொண்டார். இவர்களின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
சென்னையில் நடந்த இவர்களது திருமணத்தில் இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
லிப் லாக்
தற்போது, தன் காதல் மனைவிக்கு லிப்லாக் முத்தம் கொடுத்திருக்கிறார் கார்த்திக்.
அந்த போட்டோவை அம்ருதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு தன் கணவருடன் எடுத்துள்ள இந்த போட்டோவை ஷேர் செய்திருக்கிறார். இதனை பார்த்த பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.