அண்ணன் பண்ணிக்கிட்டான்; அதனால எனக்கு அம்மா ஒத்துக்கல - மனம் திறந்த கார்த்தி!

Karthi Suriya
By Sumathi Oct 30, 2023 05:30 PM GMT
Report

நடிகர் கார்த்தி தனது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

நடிகர் கார்த்தி

தமிழில் பருத்திவீரன் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் கார்த்தி. அவர் நடித்த முதல் படமே ரசிகர்களிடையே வெற்றியை தேடி தந்ததோடு, தேசிய விருதையும் வென்றது.

actor karthi

இதையடுத்து பையா, ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, தீரன் அதிகாரம் ஒன்று, சிறுத்தை என தொடர்ந்து வித்தியாசமான கதை களங்களில் நடித்தார். குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார்.

நடிகர் கார்த்தியின் மகளா இவங்க; இப்படி வளர்ந்துட்டாங்களே - வைரலாகும் புகைப்படம்!

நடிகர் கார்த்தியின் மகளா இவங்க; இப்படி வளர்ந்துட்டாங்களே - வைரலாகும் புகைப்படம்!

திருமணம்

இந்நிலையில், நடிகர் கார்த்தி தான் காதலிக்காதது ஏன் என்பது குறித்து பேட்டி ஒன்றில் மனம்விட்டு பேசியுள்ளார். ”எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க, யாரையும் காதலிக்காதீங்க, நாங்க கல்யாணம் பண்ணி வைக்க மாட்டோம்னு சொல்லுவாங்க.

அண்ணன் பண்ணிக்கிட்டான்; அதனால எனக்கு அம்மா ஒத்துக்கல - மனம் திறந்த கார்த்தி! | Karthi Opens About Love And Marriage

அதனாலேயே காதல் அப்படி என்ற சப்ஜெக்ட் உள்ளே போகவில்லை. அண்ணன் சூர்யா, ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களை போல் காதல் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என தாயார் என்னிடம் எச்சரித்தார். என் குடும்பத்தினர் 6 ஆண்டுகளாக தேடியும் எனக்கு பெண் கிடைக்கவில்லை.

ஒரு கட்டத்தில், என் தாய் வந்து என்னிடம், பெண் கிடைக்காததால், நீ யாரையும் காதலிக்கிறாயா என்று கேட்டார். இருந்தால் சொல் திருமணம் செய்து வைக்கிறோம் என்றார். இப்போது சொல்லி என்ன பயன் என, நீண்ட தேடுதலுக்கு பிறகு வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன் “ எனத் தெரிவித்துள்ளார்.