மதுரையில் என்றும் நீங்காத பருத்திவீரன் - நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி
நடிகர் கார்த்தி 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மதுரை வந்தது குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். கார்த்தி இயக்குனர் முத்தையா உடன் கூட்டணி அமைக்கும் 'விருமன்' படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளார். கொம்பன் படத்தை அடுத்து இரண்டாவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளனர். இந்தப் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர்.
படத்தில் சூரி, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் மூலம் அவர் கதாநாயகியாக அறிமுகம் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது. கொம்பன் படம் போலவே இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகவுள்ளது.
தேனி சுற்று வட்டாரப் பகுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. தற்போது விருமன் படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்று வட்டாரப் பகுதியில் நடைபெற்று வருகிறது.
விருமன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மதுரைக்கு வந்துள்ளேன். பருத்திவீரன் படத்தைப் பற்றி இங்குள்ள மக்கள் இன்னும் பேசிக் கொண்டிருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
அவர்களின் அரவணைப்பும் அன்பும் மாறாமல் உள்ளது. ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் நன்றியுள்ளவர்களாக உணர்கிறேன்!" என்று தெரிவித்துள்ளார்.