மாதம் 1 நாள் சம்பளத்துடன் மாதவிடாய் விடுப்பு - அரசு அறிவிப்பு
சம்பளத்துடன் மாதவிடாய் விடுப்பு அமலுக்கு வந்துள்ளது.
மாதவிடாய் விடுப்பு
கர்நாடகாவில் நீண்டகாலமாக அரசு மற்றும் தனியார் நிறுவன பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் மாதவிடாய் விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கை இருந்து வருகிறது.

இதையடுத்து பேராசிரியை சப்னா கிறிஸ்ட் தலைமையில் 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மாதம் ஒருமுறை என்று மொத்தம் 12 நாட்கள் அரசு, தனியார் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.
திட்டம் அமல்
இதனை ஏற்ற அரசு, தனியார் பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒருமுறை சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்குவதற்கான உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி 18 வயது முதல் 52 வயது நிரம்பிய பெண் ஊழியர்கள் மாதம் ஒருமுறை மாதவிடாய் விடுமுறையை எடுத்து கொள்ளலாம்.

இதற்கு எந்த மருத்துவ ஆவணங்களையும் காண்பிக்க வேண்டியது இல்லை. ஒருமாதத்தில் விடுமுறை எடுக்காவிட்டால் அதனை இன்னொரு மாதத்தில் சேர்த்து எடுக்க முடியாது. தனியார் துறையை எடுத்து கொண்டால் கர்நாடகா தொழிற்சாலைகள் சட்டம்,
கர்நாடகா கடைகள், வணிக நிறுவனங்கள் சட்டம், தோட்ட தொழிலாளர்கள் சட்டம், பீடி தொழிலாளர்கள் சட்டம், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும்.