ஓடும் ரயிலில் குளித்த நபர்; ஸ்லீப்பர் கோச்சில் சோப்பு - இறுதியில் ட்விஸ்ட்

Viral Video Uttar Pradesh Indian Railways
By Sumathi Nov 12, 2025 02:20 PM GMT
Report

ஓடும் ரயிலில் குளித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரயிலில் குளியல்

ஓடும் ரயிலில் ஒருவர் ஸ்லீப்பர் கோச்சில், பக்கெட்டில் வாளியில் தண்ணீர் கொண்டு வந்து குளித்துள்ளார். மேலும், சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்கிறார்.

ஓடும் ரயிலில் குளித்த நபர்; ஸ்லீப்பர் கோச்சில் சோப்பு - இறுதியில் ட்விஸ்ட் | Up Man Bathes With Bucket In Moving Train Viral

இதுதொடர்பான வீடியோவை அவரே சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டார். தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தியதில்,

பள்ளி மாணவர்களுக்கு பேப்பரில் மதிய உணவு - கொடூர செயல்!

பள்ளி மாணவர்களுக்கு பேப்பரில் மதிய உணவு - கொடூர செயல்!

இளைஞர் கைது

அந்த நபர் உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி பகுதியை சேர்ந்த பிரமோத் ஸ்ரீவாஸ் என்பது தெரியவந்தது. சோஷியல் மீடியாவில் திடீரென ஃபேமஸ் ஆகவேண்டும் என்பதற்காகவே

indian railways

இப்படி குளிக்கும் வீடியோ எடுத்து போஸ்ட் செய்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்ததுடன், ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.