கல்யாணமாகி 1 மாதம்தான்; பிரிந்து சென்ற காதல் மனைவி - தேசிய கபடி வீரர் தற்கொலை!
மனைவி பிரிந்து சென்றதில் கபடி வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
மனைவியின் பிரிவு
கர்நாடகா, தேகுரு கிராமத்தை சேர்ந்தவர் வினோத் ராஜ் அரஸ்(24). இவர் தேசிய அளவிலான கபடி போட்டிகளில் விளையாடி உள்ளார். இவருக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த தனுஜா(22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அதுவே நாளடைவில் காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து 2 வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த தனிஜா பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்துக்கொண்டனர்.
கபடி வீரர் தற்கொலை
அதன்பின் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், தனுஜாவின் பெற்றோர் போலீஸில் புகாரளித்த நிலையில் வினோத், தனுஜா பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். அப்போது பெற்றோரை பார்த்த தனுஜா அவர்களுடனே சென்றுவிட்டார்.
இதனால் மனமுடைந்த வினோத் கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமலும், கபடி விளையாட செல்லாமலும் இருந்து வந்துள்ளார். அதன்பின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த போலீஸார் உடனே விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.