தூக்கிட்டு தற்கொலை செய்த சிறுவன்; பார்த்த பெற்றோரும் விபரீத முடிவு - ஷாக் பின்னணி!
17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
மகன் தற்கொலை
மத்திய பிரதேசம், குராவலி காலனியில் வசித்து வந்தவர் ஜிதேந்திரா ஜா(50). கட்டிட மேஸ்திரியாக இருந்து வந்துள்ளார். இவரது மனைவி திரிவேணி (40). அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்.
இவர்களது மகன் அக்சல் ஜா(17) 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டின் அருகே சில நேரமாக இவர்கள் யாரையும் காணாத நிலையில் அக்கம்பக்கத்தினர் போலீஸில் புகாரளித்தனர்.
பெற்றோர் விபரீத முடிவு
அதன் அடிப்படையில், சம்பவ இடம் விரைந்த போலீஸார் கதவை திறந்து பார்க்கையில், மூவரும் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளனர். ஜிதேந்திராவின் கையில் கத்தியால் வெட்டிய அடையாளமும் இருந்துள்ளது. அதன்பின் சோதனையில் அக்சல் எழுதிய தற்கொலை கடிதம் சிக்கியது.
அதில், ஒரு நபர் அக்சலுக்கு தீவிர மன அழுத்தம் கொடுத்து வந்ததால் இந்த முடிவை எடுத்து கொண்டதாக எழுதியுள்ளார். மேலும், அந்த நபரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர் விசாரணையில், முதலில் அக்சல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் இதனால் மனம் உடைந்த பெற்றோரும் தற்கொலை முடிவுக்கு வந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.