இன்ஸ்டாகிராமில் பழக்கம்..முருங்கை சாம்பார் ஊற்றி கணவனை கொலை செய்த மனைவி!

Karnataka Crime Death Murder
By Vidhya Senthil Oct 28, 2024 12:38 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

  இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட கள்ளக்காதலால் உணவில் விஷம் கலந்து மனைவி கணவனைக் கொலை செய்துள்ளார்.

 கர்நாடக

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கார்கலாவின் அஜெகாரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ண- பிரதிமா தம்பதியினர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.

karnataka wife kill husband

இந்த நிலையில் பாலகிருஷ்ணாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, வாந்தி, காய்ச்சலால் கடும் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு மஞ்சள் காமாலை இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து பெங்களூரூவில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனைக்கும் அழைத்து சென்று, சிகிச்சை பிரதிமா தந்தார்.எனினும் பலனளிக்காமல் கடந்த 20ம் தேதி பாலகிருஷ்ண பூஜாரி உயிரிழந்துவிட்டார். பாலகிருஷ்ணா பூஜாரி இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கள்ளக்காதலுக்கு இடையூறு - துடிக்க துடிக்க கணவரைத் தீர்த்துக்கட்டிய கொடூரம்!

கள்ளக்காதலுக்கு இடையூறு - துடிக்க துடிக்க கணவரைத் தீர்த்துக்கட்டிய கொடூரம்!

அப்போது பிரதிமா நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படவே அவரிடம் விசாரணை மேற்கொண்டத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தனர். பிரதிமாவுக்கு ரீல்ஸ் செய்வதில் மிகவும் ஆர்வம் அதிகமாம்.. அதனால், தன்னுடைய கணவரையும் கட்டாயப்படுத்தி, பலவந்தமாக ரீல்ஸ் செய்ய வைத்துள்ளார்.

 கொலை 

இதனிடையே ,இன்ஸ்டாகிராமில் திலீப் ஹெக்டே என்ற 30 வயது இளைஞர் அறிமுகமாகி பழக்கம் ஏற்பட்டு கள்ளத்காதலாக மாறியுள்ளது. இதனை கணவர் பாலகிருஷ்ண பூஜாரி கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பிரதிமா முடிவு செய்து, "ஸ்லோ பாய்சன்" கலந்து அவருக்குக் கொடுத்து வந்தார்.

இதனால் அவரது உடல்நலன் வெகுவாக பாதிக்கப்பட்டது. யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக வெவ்வேறு மருத்துவமனைகளில் கணவரை அழைத்து சென்றுபிரதிமா நாடகமாடியிருக்கிறார்.

murder

கடந்த 20ம் தேதி, மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்த பிரதிமா, கள்ளத்காதலனுடன் இனைந்து பெட்ஷீட்டை எடுத்து, கணவரின் மீது மனைவி போர்த்தி சரமாரியாகத் தாக்கியுள்ளார். அதன்பிறகு கழுத்தை நெரித்தும் கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல் துறையினர் அந்த ஜோடியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.