திருமணமாகி 45 நாள்தான்; கதறிய கணவன் - மனைவி செய்த அதிர்ச்சி செயல்!
மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூக்கிட்டு தற்கொலை
கன்னியாகுமரி, மந்தவிளையைச் சேர்ந்தவர் நடராஜன்(37). அப்பகுதியில், ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு அண்மையில் தான் பீளமேடு பகுதியை சேர்ந்த காயத்ரி (32) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், திடீரென காயத்ரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதிர்ச்சி சம்பவம்
உடனே சம்பவ இடம் விரைந்த போலீஸார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின், வழக்குப்பதிவு செய்த போலீஸார் குடும்பத்தில் பிரச்சினை ஏதும் நடந்ததா?
இல்லை வேறு ஏதேனும் தற்கொலைக்கு காரணமா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.