தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி - கணவன் வீடியோ எடுத்த கொடூரம்!
மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை வீடியோ எடுத்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத் தகராறு
உத்தரப்பிரதேசம், கான்பூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜ் கிஷோர் குப்தா. இவரது மனைவி சோபிதா குப்தா. இருவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இத்தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
தொடர்ந்து, கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று தகராறில் சோபிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனை அவரது கணவர் தடுக்காமல் வீடியோ எடுத்துள்ளார்.
மனைவி தற்கொலை
மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் அவரது பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் மகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அப்போது கணவர் எடுத்த வீடியோவை காட்டியுள்ளார்.
அதில், “இது தான் உன் மனநிலையா. ரொம்ப நல்லது. மிகவும் மோசமான மனநிலை கொண்டிருக்கிறாய் நீ” என்று அந்த நபர் கூறுகிறார். பின்னர் அவர் மனைவி முறைக்கிறார். அதனையடுத்து புகாரின் அடிப்படையில் விரைந்த போலீஸார் சோபிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சஞ்சீவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.