ஓசூரில் விமான நிலையம் ? தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை!
ஓசூரை கர்நாடக மாநிலத்துடன் இணைத்த பின்னரே, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி அளிப்போம் என வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
வாட்டாள் நாகராஜ்
கர்நாடக மாநிலம் பொம்மசந்திரம் -ஓசூர் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு-கர்நாடகா மாநில எல்லையில் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த வாட்டாள் நாகராஜ்,''ஓசூர் மற்றும் உதகை ஆகியவை கர்நாடக மாநிலத்தில் அமைய வேண்டிய பகுதிகளாகும்.ஆனால், இந்தப் பகுதிகள் காமராஜர் ஆட்சியில் தமிழகத்துடன் இணைக்கப்பட்டன.
தமிழக முதல்வர்
எனவே, ஓசூரை கர்நாடக மாநிலத்துடன் இணைத்த பின்னரே, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி அளிப்போம் என்று கூறினார்.மேலும் மேகேதாட்டில் அணை கட்ட மத்திய மற்றும் கர்நாடக அரசு நிதி ஒதுக்கவில்லை என்றால், மக்களிடம் நிதி திரட்டி, அணையைக் கட்டுவோம் என்று கூறினார் .
தொடர்ந்து பேசிய அவர் ,'' ஓசூரில் விமான நிலையம் அமைப்பதாகத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.ஆனால் அது நடக்காது என்று தெரிவித்தார். தொடர்ந்து, வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட 50 பேரை கர்நாடக மாநில போலீஸார் கைது செய்தனர்.இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .