வாட்டாள் நாகராஜ் நீ என்ன பெரிய ஆளா..!! - இரும்பு ராடுடன் பாய்ந்த விஜயகாந்த்..!!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவலைகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
விவகாரம்
தமிழகத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் எப்போதும் தொடர்ந்து காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதில், நடிகர்களை ஒன்றிணைத்து நடிகர் விஜயகாந்த் நடத்திய போராட்டம் தமிழர்கள் மீது அவர் வைத்திருந்த அன்பையே வெளிப்படுத்தியது.
வாட்டாள் நாகராஜ் எப்போதும் இந்த விவகாரத்தில் சர்ச்சையான கருத்துக்களையே தெரிவித்து வருவார். விஜயகாந்த் இங்கிருந்த எதிர்ப்பு தெரிவித்த வந்த நிலையில், விஜயகாந்த் குறித்தும் கன்னட மக்களுக்கு தெரியத்துவங்கியது.
நீ என்ன பெரிய ஆளா..?
அப்போது, பாரதிராஜா இயக்கத்தில் விஜயகாந்த் தமிழ்ச்செல்வன் படத்தின் ஷூட்டிங்கிற்காக கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள கொல்லோகால் பகுதி சென்றுள்ளார். அப்போது, படக்குழுவினர் தங்கி இருந்த ஹோட்டலுக்கு வந்த வாட்டாள் நாகராஜு மற்றும் அவரின் கட்சியை சேர்ந்தவர்கள் படப்பிடிப்பிற்கு பயன்படுத்தும் கிளாப் போர்டில் தமிழ் மொழியில் எழுதக்கூடாது என என தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இயக்குனர் பாரதிராஜாவின் மூலம் அறிந்த விஜயகாந்த் உடனே தனது காரில் இருந்த இரும்பு ராடை கையில் எடுத்து நீ என்ன பெரிய ஆளா..? வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரின் கும்பலுடன் சீறியுள்ளார். இந்த தொடர்ந்து பிரச்சனை பெரிதாவதை உணர்த்த அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். கேப்டனின் தைரியத்திற்கு இதுவும் ஒரு சான்று என்றே கூறலாம்.