இந்தியாவின் தேசிய மொழி எது? கனிமொழி நச் பதில் - வைரலாகும் வீடியோ
கனிமொழியிடம் மொழி பிரச்சனை தொடர்பான கேள்வி கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தேசிய மொழி எது?
‛ஆபரேஷன் சிந்தூர்' குறித்த பாகிஸ்தானின் பொய் பிரசாரங்களை தகர்க்க 7 எம்பிக்கள் தலைமையிலான குழுக்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளன. அதில் திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழுவும் ஒன்று.
இவரது குழுவில் சமாஜ்வாதி எம்பி ராஜீவ் ராய், தேசிய மாநாட்டு கட்சி எம்பி மியான் அல்தாப் அகமது, பாஜக எம்பி பிரிஜேஷ் சோவ்டா, ஆர்ஜேடி கட்சியின் பிரேம் சந்த் குப்தா, ஆம்ஆத்மியின் அசோக் குமார் மிட்டல், தூதர்கள் மங்சீவ் எஸ் புரி, ஜாவேத் அஷ்ரப் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவுக்கு 5 நாடுகள் ஒதுக்கப்பட்டது. ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா, லத்திவா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளை கனிமொழி தலைமையிலான குழுவினர் சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஸ்பெயினுக்கு சென்றனர்.
கனிமொழி எம்பி பதில்
அப்போது பாகிஸ்தானின் பயங்கரவாதம் குறித்தும், பயங்கரவாதத்துக்கு எதிரான ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றியும் கனிமொழி அந்தநாட்டின் பிரதிநிதிகளிடம் கூறினார். மேலும், ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் புலம்பெயர் இந்தியர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அப்போது இந்தியாவின் தேசிய மொழி எது? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு கனிமொழி எம்பி, ‛‛இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையிலும் ஒற்றுமையாக இருப்பது தான். இதுதான் உலகிற்கு இந்த குழு தரும் செய்தி. இதுவே இன்றைக்கு மிக முக்கியமான விஷயம்'' என்றார்.
#WATCH | Madrid, Spain: While addressing the Indian diaspora, DMK MP Kanimozhi said, "The national language of India is unity and diversity. That is the message this delegation brings to the world, and that is the most important thing today..." pic.twitter.com/cVBrA99WK3
— ANI (@ANI) June 2, 2025
இவரது பதில் பெரும் கவனம் பெற்றுள்ளது. மத்திய அரசு இந்திக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறது. புதிய கல்வி கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயற்சிக்கிறது என்று தமிழக அரசு கூறி வருவது குறிப்பிடத்தக்கது.