Thursday, Jul 3, 2025

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியல.. பிரதமர் மோடி கொதிப்பு

Narendra Modi Jammu And Kashmir
By Sumathi a month ago
Report

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தளத்தில், பயங்கரவாதிகளால் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

modi

இதற்குப் பதிலடியாக பயங்கரவாத முகாம்களின் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி மேற்கு வங்கம், அலிபுர்துவார் பகுதியில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை.

கொரோனா நோயாளிகளை கொல்ல உத்தரவிட்ட அரசு டாக்டர் - ஆடியோ வெளியாகி சர்ச்சை

கொரோனா நோயாளிகளை கொல்ல உத்தரவிட்ட அரசு டாக்டர் - ஆடியோ வெளியாகி சர்ச்சை

மோடி சூளூரை

140 கோடி இந்தியர்கள் சார்பாக இதை அறிவிக்கிறேன். இந்தியாவை ஒரு பயங்கரவாதி தாக்கினால் அதற்காக மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டும். பாகிஸ்தானுக்குள் புகுந்து மூன்று முறை இந்திய ராணுவம் தாக்குதல் மேற்கொண்டது.

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியல.. பிரதமர் மோடி கொதிப்பு | Operation Sindoor Not Complete Says Modi

பயங்கரவாதம் மற்றும் வன்முறையின் இனப்பெருக்கக் களமாக பாகிஸ்தான் உள்ளதாக தெரிவித்துள்ளார்.