உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி எப்போது? கனிமொழி எம்பி தகவல்
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி குறித்து கனிமொழி பேசியுள்ளார்.
கனிமொழி எம்பி
சென்னை மைலாப்பூரில் திமுக எம்பி.யும், துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டார். அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது மாணவர்கள் அவரது அரசியல் நுழைவு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கனிமொழி, தனது தந்தை கருணாநிதி கைதின் போது காவல்துறையை நோக்கி சாதாரண கேள்வி எழுப்பியபோது, அதனையும் குற்றமாக எதிர்கொண்டேன்.
அரசியல் வருகை
அந்த அசாதாரண தருணத்திலும் கலைஞர் ஒரு போராளியாக எதிர்கொண்டார். அதுவே தனது அரசியல் நுழைவு என்று தெரிவித்தார்.
மேலும், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவதும், தான் மாநில அரசியலுக்கு வருவது குறித்தும் கட்சியும், முதலமைச்சரும் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.