ஓராண்டு மகப்பேறு விடுப்பு-முதல்வர் அறிவிப்புக்கு MP கனிமொழி கொடுத்த ரியாக்ஷன்!
மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்கள் குறித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு திமுக எம்.பி கனிமொழி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ஓராண்டு மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்கள், பெற்றோர் அல்லது கணவர் வசிக்கும் ஊரிலேயே பணியாற்றும் சலுகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த நிலையில் மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்கள் குறித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு திமுக எம்.பி கனிமொழி வரவேற்பு தெரிவித்துள்ளார்.இது குறித்து திமுக எம்.பி கனிமொழி வெளியிட்டுள்ள x -தள பதிவில், '
எம்.பி கனிமொழி
காவல்துறையில் மகளிர் பங்காற்றத் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததன் பொன்விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மகப்பேறு சமயங்களில் விடுப்பு இல்லாமல் பல இக்கட்டுகளுக்கு உள்ளான பெண் காவலர்களுக்கு,மகப்பேறு விடுப்பு ஓராண்டுக்கு உயர்த்தப்படும் என்ற முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு விடிவெள்ளியாய் அமைந்துள்ளது.
மேலும், மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்கள், குழந்தையைப் பராமரிக்கும் வகையில் 3 ஆண்டுகளுக்குக் கணவர் அல்லது பெற்றோர் வசிக்கக் கூடிய மாவட்டங்களில் பணியைத் தொடரலாம் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.