பணத்தைத் திருப்பித் தராத ரயில்வே ஊழியர் - ரத்தம் சொட்ட சொட்ட.. காஞ்சிபுரத்தை உலுக்கிய கொலை !
உத்திரமேரூர் அருகே கொடுத்த பணத்தைத் திருப்பித் தராததால் ரயில்வே ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரயில்வே ஊழியர்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் கடந்த மாதம் 29-ஆம் தேதி 40 வயதுடைய ஆண் சடலம் ஒன்று சாலை ஓரத்தில் ரத்தக் காயங்களுடன் கிடந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உத்திரமேரூர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர் .
உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தைப் கைபற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல் ஆய்வாளர் பரந்தாமன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. செங்கல்பட்டைச் சேர்ந்தவர் ரமேஷ்.இவருக்கு வயது 47.இவர் ரயில்வே துறையில் சுமை தூக்கும் தொழிலாளராகப் பணியாற்றி வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் வயது 34 என்பவரது மனைவி தமிழ் செல்வியிடம் சுமார் 13 லட்ச ரூபாய்க் கடனாக வாங்கியதாகக் கூறப்படுகிறது.
கொலை
மேலும் வாங்கிய பணத்தை ரமேஷ் திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் அவருடைய கூட்டாளிகள் 4 பேரும் சேர்ந்து ரமேஷை தாக்கியுள்ளனர் இதில் சுயநினைவை இழந்த ரமேஷ் சரிந்து விழுந்துள்ளார்.
உடனே அவர் தலையில் அடித்து, கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலை வீசிச் சென்றது காவல்துறையின் விசாரணை தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கார்த்திக் அவரது மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் கூட்டாளிகள் 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.