பேருந்து படிக்கட்டில் தொங்கும் மாணவர்கள்; தவிர்க்க புது யுக்தி - இனி இப்படித்தான்..
பேருந்துகளில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு பயணிப்பதை தடுக்க புது முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
படிக்கட்டில் பயணம்
பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தொங்கிக்கொண்டு பயணிப்பதோடு இல்லாமல் சாகச சம்பவங்களில் ஈடுபடுவதால் உயிரிழப்பு சம்வங்கள் மற்றும் விபத்துக்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பேருந்துகளில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு பயணிப்பதை தடுக்க காஞ்சிபுரம் பணிமனையில் இருந்து இயக்கப்படும் நகர பேருந்துகளின் படிக்கட்டுகளில் உள்ள ஜன்னலில் இரும்பு தகரம் வைத்து போக்குவரத்து துறையினரால் அடைக்கப்பட்டுள்ளது.
புதிய முயற்சி
இந்த முயற்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, பணிமணியின் கீழ் செயல்படும் அனைத்துநகர பேருந்துகளிலும் இதுபோன்ற தகரம் பொருத்தும் பணியில் தொழிற்பிரிவு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், விபத்துக்கள் குறையும் எனவும் படிக்கட்டுகளில் தொங்குவது முற்றிலும் தடுக்கப்படும் எனவும் கருதப்படுகிறது.