இனி அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது - அரசு அதிரடி

Government of Tamil Nadu
By Thahir May 24, 2023 05:53 AM GMT
Report

தமிழகத்தில் உள்ள அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் 5 வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு அதிரடி உத்தரவு 

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இதில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் டவுன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த டவுன் பேருந்துகளில் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க தேவையில்லை கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். இந்த நிலையில் தற்போது 5 வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Children up to 5 years are free on buses

அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை

இது குறித்து அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்; பேருந்துகளில் 5 வயதுக்கு மிகாத குழந்தை கணக்கிடப்படாது கட்டணமும் வசூலிக்கப்படாது.

பேருந்துகளில் 5 வயதுக்கு மிகாத குழந்தைகளுக்கு கணக்கிடப்படாது.கட்டணமும் வசூலிக்கப்படாது. மாவட்ட விரைவு பேருந்துகளில் 3 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இருந்த அரை டிக்கெட் அனுமதி தற்போது 5 வயது முதல் 12 வயதாக உயர்த்தப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.