இன்று முதல் அரசு பேருந்துகளில் பார்சல் சேவை...விலைப்பட்டியல் எவ்வளவு தெரியுமா?
தமிழக அரசு போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் அரசு பேருந்துகளில் பார்சல் சேவை தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அரசுப் பேருந்துகளில் பார்சல் சர்வீஸ் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக திருச்சி, மதுரை, கோவை, ஓசூர், குமரி, நெல்லை மாவட்டத்தில் இருந்து தொடங்கப்படுகிறது பொதுமக்கள் தினசரி மற்றும் மாத வாடகை மூலமாக பார்சல் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
விலைப்பட்டியல் இதோ..
திருச்சியிலிருந்து சென்னைக்கு 80 கிலோ வரையிலான பார்சல்களை அனுப்புவதற்கு தினசரி கட்டணமாக ரூ.210 வசூலிக்கப்படுகிறது.
மதுரையிலிருந்து சென்னைக்கு 80 கிலோ வரையிலான பார்சல்களை அனுப்புவதற்கு தினசரி கட்டணமாக ரூ.300 வசூலிக்கப்படுகிறது.
திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு 80 கிலோ வரையிலான பார்சல்களை அனுப்புவதற்கு தினசரி கட்டணமாக ரூ.390 வசூலிக்கப்படுகிறது.
துாத்துக்குடியிலிருந்து சென்னைக்கு 80 கிலோ வரையிலான பார்சல்களை அனுப்புவதற்கு தினசரி கட்டணமாக ரூ.390 வசூலிக்கப்படுகிறது.
செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு 80 கிலோ வரையிலான பார்சல்களை அனுப்புவதற்கு தினசரி கட்டணமாக ரூ.390 வசூலிக்கப்படுகிறது.
கோயம்புத்துாரில் இருந்து சென்னைக்கு 80 கிலோ வரையிலான பார்சல்களை அனுப்புவதற்கு தினசரி கட்டணமாக ரூ.330 வசூலிக்கப்படுகிறது.
ஓசூரிலிருந்து சென்னைக்கு 80 கிலோ வரையிலான பார்சல்களை அனுப்புவதற்கு தினசரி கட்டணமாக ரூ.210 வசூல் செய்யப்படுகிறது.