சின்னவர் எனக் கூப்பிடும் படி நான் சொல்லவில்லை : உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Tamil nadu DMK
By Irumporai Jul 03, 2022 07:43 AM GMT
Report

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் தி.மு.க. ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா ஆதம்பாக்கம் கே.ஆர். ஜெ.கார்டனில் நடைபெற்றது.

இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின் :  

அன்பினால் பேசுகின்றனர்

என்னைப்பற்றி நிறைய கூட்டங்களில் பேசும்போது, 'மூன்றாம் கலைஞர்' 'இளம் கலைஞர்', 'சின்ன கலைஞர்' இப்படி என் மீதுள்ள அன்பு காரணமாக இப்படி பேசுகிறார்கள்.

அவர்கள் என்னை பெருமைபடுத்துவதாக நினைத்துக் கொண்டு கலைஞரை சிறுமைப்படுத்துறாங்க. கலைஞருக்கு நிகர் கலைஞர் மட்டும் தான். ஒரே கலைஞர் தான். இனி எத்தனை பேர் பிறந்திருந்தாலும் கலைஞருக்கு நிகர் யாராலும் பிறக்க முடியாது.

ஒரே தலைவர் கலைஞர் தான்

 ஒரே தலைவர் கலைஞர் தான். ஒரே தலைவர்தான். அதைத் தான் நான் சொன்னேன். இங்கு இருக்கிற உங்களோட வயது, உங்களுடைய அனுபவம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கும் போது நான் ரொம்ப சின்னவன்.

சின்னவர் எனக் கூப்பிடும் படி நான் சொல்லவில்லை : உதயநிதி ஸ்டாலின் பேச்சு | Kanchipuram Dmk Organized Udayanithi Chiinavar

நான் சின்னவர் என சொல்லவில்லை

அதனால் என்னை சின்னவர் என்று கூப்பிடுங்கள் என்று சொன்னேனே தவிர நானாக போய் எல்லோரும் என்னை 'சின்னவர்' என்று கூப்பிடுங்கள்,என்று சொன்னது போல் கூறுகின்றனர்.

சின்னவர் எனக் கூப்பிடும் படி நான் சொல்லவில்லை : உதயநிதி ஸ்டாலின் பேச்சு | Kanchipuram Dmk Organized Udayanithi Chiinavar

நான் ரொம்ப சின்னவன்

நீங்களே என்னை புரிஞ்சுக்கல. நான் பெரியாரை நேரில் பார்த்தது கிடையாது. பேரறிஞர் அண்ணாவை நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் இங்குள்ள மூத்த முன்னோடிகள் நீங்கள் நேரில் பார்த்திருப்பீர்கள்.

சின்னவர் எனக் கூப்பிடும் படி நான் சொல்லவில்லை : உதயநிதி ஸ்டாலின் பேச்சு | Kanchipuram Dmk Organized Udayanithi Chiinavar

நான் பார்த்தது எல்லாம் முத்தமிழறிஞர் கலைஞரையும், இனமான பேராசிரியர் தாத்தாவையும், நம்முடைய தலைவரையும் தான் பார்த்திருக்கிறேன். இவர்களை பார்த்து தான் நான் அரசியலை கற்றுக் கொள்கிறேன் எனக் கூறினார்.  

மக்கள் வளர்ச்சிக்காக என் சக்தியை மீறி உழைத்து வருகிறேன் : முதலமைச்சர் ஸ்டாலின்