"சீக்கியர்கள் 12 மணிக்கு மேல்.." நக்கலடித்த பாக். வீரர் - கொந்தளித்த ஹர்பஜன் சிங்

Indian Cricket Team Pakistan national cricket team Harbhajan Singh T20 World Cup 2024
By Karthikraja Jun 11, 2024 06:08 AM GMT
Report

 கம்ரான் அக்மலின் சீக்கியர்கள் குறித்த இனவெறி பேச்சுக்கு ஹர்பஜன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கம்ரான் அக்மல்

நியூயார்க்கில் நடந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் கடைசி ஓவரை அர்ஷிதீப் சிங் வீசினார்.

"சீக்கியர்கள் 12 மணிக்கு மேல்.." நக்கலடித்த பாக். வீரர் - கொந்தளித்த ஹர்பஜன் சிங் | Kamran Akmal Racist Speech On Sikh Harbajan Singh

அதற்கு முன்னர் வர்ணனையில் பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல், "மணி 12க்கு மேல் ஆகிவிட்டது. இனி சீக்கியரான அர்ஷ்தீப் சிங்குக்கு ஓவர் கொடுத்தால் பாகிஸ்தான் வீரர்கள் அடித்து விடுவார்கள்" என்று கிண்டல் அடிக்கும் வகையில் கூறினார். 

கண்ணீர் விட்டு கதறி அழுத தோனி - உண்மையை பகிர்ந்த ஹர்பஜன் சிங்..!

கண்ணீர் விட்டு கதறி அழுத தோனி - உண்மையை பகிர்ந்த ஹர்பஜன் சிங்..!

ஹர்பஜன் சிங் பதிலடி

அவரின் இந்த பேச்சு சீக்கியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்ரான் அக்மலுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கடும் பதிலடி கொடுத்தார்.

harbajan singh

இது குறித்து ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் பதிவில், "உன்னை லட்சம் முறை சபிக்கிறேன் கம்ரான் அக்மல். உனது இழிவான வாயை திறக்கும் முன் நீ சீக்கியர்களின் வரலாறு பற்றி தெரிந்து கொண்டு பேசியிருக்க வேண்டும். 

சீக்கியர்கள் தான் உனது தாய் மற்றும் சகோதரிகளை எதிரிகளிடமிருந்து காப்பாற்றினார்கள். அப்போது மணி இரவு 12. உன்னை நினைத்து அவமானப்படுகிறேன். கொஞ்சமாவது நன்றி உணர்வுடன் இரு" என்று கூறி இருக்கிறார். 

மன்னிப்பு

இதை தொடர்ந்து கம்ரான் அக்மல் தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், ''எனது சமீபத்திய கருத்துக்களுக்கு நான் மிகவும் வருந்துகிறேன். ஹர்பஜன் சிங் மற்றும் சீக்கிய சமூகத்திடம் நேர்மையாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 

எனது வார்த்தைகள் பொருத்தமற்றதாகவும், அவமரியாதை செய்வதாகவும் இருந்தன. உலகெங்கிலும் உள்ள சீக்கியர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. யாரையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டதில்லை. நான் உண்மையிலேயே வருந்துகிறேன்'' என தெரிவித்துள்ளார்.