கண்ணீர் விட்டு கதறி அழுத தோனி - உண்மையை பகிர்ந்த ஹர்பஜன் சிங்..!

MS Dhoni Chennai Super Kings Harbhajan Singh IPL 2023
By Thahir May 25, 2023 07:26 AM GMT
Report

தோனி விருந்து நிகழ்வின் போது கண்ணீர் விட்டு அழுததாக முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

சாதனை படைக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் 

இந்த ஆண்டு விறுவிறுப்பாக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முக்கிய அணியாக இருந்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் போட்டியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

MS Dhoni Burst Into Tears

ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததில் இருந்து சென்னை அணியின் கேப்டனாக 2008ம் ஆண்டு முதல் இன்று வரை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் தோனி.

இந்த நிலையில் தோனி குறித்த ஒரு நிகழ்வை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பகிர்ந்துள்ளார்.

கண்ணீர் விட்டு அழுத தோனி 

அதில் அவர், நான் பகிர்ந்து கொள்ள விரும்பும் ஒரு நிகழ்வு ஒன்று உள்ளது. 2 ஆண்டு தடைக்கு பின்னர் 2018 ம் ஆண்டு சிஎஸ்கே மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்பிய போது ஒரு இரவு அணியினருக்கு உணவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆண்கள் அழுவதில்லை என்ற பழமொழியை நான் கேள்வி பட்டிருக்கிறேன்.ஆனால் அன்று இரவு எம்.எஸ்.தோனி அழுதார்.

MS Dhoni Burst Into Tears

அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். இதைப் பற்றி யாருக்கும் தெரியாது என நினைக்கிறேன். சரியா இம்ரான் தாஹீர் என்றார்.

பதில் அளித்த இம்ரான் தாஹீர் 

ஆம் நிச்சயமாக அப்பொழுது நானும் அங்கு இருந்தேன்.தோனிக்கு அது ஒரு உணர்ச்சிகரமான தருணம். அவரை அப்படி பார்க்கும் பொழுது இந்த அணி அவருக்கு எவ்வளவு நெருக்கமானது என்பதை நான் அறிந்தேன்.

அவர் அணியை தன் குடும்பமாக கருதுகிறார். இது எங்கள் அனைவருக்கும் மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது.

நாங்கள் இரண்டு கழித்து திரும்பி வந்து கோப்பையை கைப்பற்றினோம். அப்பொழுது மக்கள் எங்கள் அணிக்கு புத்தே ( வயதானவர்கள்) என பெயர் வைத்தனர்.

அந்த சீசனில் நானும் அணியில் இருந்தேன், நாங்கள் பட்டத்தை வென்றோம் அந்த வெற்றியால் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என இம்ரான் தாஹீர் தெரிவித்தார்.