நன்றி அண்ணா: சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் அணிவித்த நடிகர் கமல்

Kamal Haasan Suriya Lokesh Kanagaraj Vikram Movie
By Thahir Jun 08, 2022 09:25 AM GMT
Report

விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் கமல்ஹாசன் நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வசூல் சாதனை

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வெளியான 5 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

நன்றி அண்ணா: சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் அணிவித்த நடிகர் கமல் | Kamal Watch Gift To Suriya

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்துள்ள திரைப்படம் விக்ரம்.இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா,விஜய் சேதுபதி,ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் கடந்த ஜுன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான நாட்கள் முதல் திரைப்படம் குறித்த விமர்சனம் தொடர்ந்து சமூக வளைதலங்களில் பேசப்பட்டு வருகிறது.

விக்ரம் திரைப்படத்தை பார்பதற்கு திரையரங்குளில் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ் புல் ஆக இருந்து வருகிறது.

இதையடுத்து விக்ரம் திரைப்படம் வெளியான 5 நாட்களில் 200 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அன்பளிப்பு கொடுக்கும் கமல் 

இதையடுத்து உலக நாயகன் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கார் ஒன்றை நேற்று பரிசாக அளித்தார். இந்த புகைப்படம் சமூகவளைத்தலத்தில் வைரலானது,

நன்றி அண்ணா: சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் அணிவித்த நடிகர் கமல் | Kamal Watch Gift To Suriya

மேலும் படத்தின் உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு அப்பாச்சி ஆர்டிஆர் 160 ரக பைக்குகளை வழங்கியுள்ளதாக தகவல் வெளியானது.

நன்றி அண்ணா: சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் அணிவித்த நடிகர் கமல் | Kamal Watch Gift To Suriya

இந்த நிலையில் நடிகர் சூர்யாவுக்கு,கமல் ரோலக்ஸ் வாட்ச் வழங்கியுள்ளார்.இதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள நடிகர் சூர்யா இந்த தருணம் வாழ்க்கையை அழகாக்குகிறது நன்றி அண்ணா.