விக்ரம் படத்தில் சூர்யா இந்த கேரக்டரில் தான் நடித்துள்ளாரா? - ட்ரெய்லரில் வெளியான ட்விஸ்ட்
நடிகர் கமல்ஹாசன் படத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளது பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில், நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் விக்ரம். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அழ்வார்பேட்டையில் சாம்கோ ஹோட்டல் முன்பு கமல் சாரைப் பார்க்க 10 - 11 ஆண்டுகளுக்கு முன்னர் ஏங்கி நிற்பேன். ஆனால் இன்று அவரை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விக்ரம் படத்துக்காக பயிற்சியாளர்களைக் கொண்டு விஜய் சேதுபதி பயிற்சி எடுத்தார்.
அதேபோல் ஃபகத் பாசிலின் படங்களைப் பார்த்த பிறகு அவர் அமைதியானவர் என நினைத்தேன். ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு மிகக் குறைந்த நாளில் நாங்கள் இருவரும் நண்பர்களாகிவிட்டோம் என லோகேஷ் கூறினார்.
மேலும் ஒரு விஷயத்தை ரகசியமாக வைக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் வெளியில் தெரிந்து விட்டது. ஆம் விக்ரம் படத்தில் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் என அவர் கூறினார்.
இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் போது கடைசியில் விக்ரம்..விக்ரம் என கமல் கத்துவது போல காட்சி அமைந்துள்ளது. அப்படி பார்த்தால் சூர்யா தான் அந்த விக்ரமா? என ரசிகர்கள் கணித்துள்ளனர்.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil