200 கோடி அப்பு..5 நாளில் கோடிகளை குவித்த விக்ரம் - இயக்குநர்களுக்கு பைக் வழங்கிய கமல்ஹாசன்..!

Kamal Haasan Lokesh Kanagaraj Vikram Movie
By Thahir Jun 08, 2022 04:38 AM GMT
Report

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வெளியான 5 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதையடுத்து படத்தின் உதவி இயக்குநர்களுக்கு அப்பாச்சி பைக்குகளை உலக நாயகன் வாங்கி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்துள்ள திரைப்படம் விக்ரம்.இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா,விஜய் சேதுபதி,ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

200 கோடி அப்பு..5 நாளில் கோடிகளை குவித்த விக்ரம் - இயக்குநர்களுக்கு பைக் வழங்கிய கமல்ஹாசன்..! | Kamal Haasan Presented The Bike To The Directors

இத்திரைப்படம் கடந்த ஜுன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான நாட்கள் முதல் திரைப்படம் குறித்த விமர்சனம் தொடர்ந்து சமூக வளைதலங்களில் பேசப்பட்டு வருகிறது.

200 கோடி வசூல்

விக்ரம் திரைப்படத்தை பார்பதற்கு திரையரங்குளில் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ் புல் ஆக இருந்து வருகிறது.

இதையடுத்து விக்ரம் திரைப்படம் வெளியான 5 நாட்களில் 200 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

200 கோடி அப்பு..5 நாளில் கோடிகளை குவித்த விக்ரம் - இயக்குநர்களுக்கு பைக் வழங்கிய கமல்ஹாசன்..! | Kamal Haasan Presented The Bike To The Directors

இதையடுத்து உலக நாயகன் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கார் ஒன்றை நேற்று பரிசாக அளித்தார். இந்த புகைப்படம் சமூகவளைத்தலத்தில் வைரலான நிலையில்,

தற்போது படத்தின் உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு அப்பாச்சி ஆர்டிஆர் 160 ரக பைக்குகளை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

200 கோடி அப்பு..5 நாளில் கோடிகளை குவித்த விக்ரம் - இயக்குநர்களுக்கு பைக் வழங்கிய கமல்ஹாசன்..! | Kamal Haasan Presented The Bike To The Directors