ராஜ்யசபா எம்பி யார்? கமல் எடுக்கப்போகும் முக்கிய முடிவு!
ராஜ்யசபா எம்.பியை தேர்வு செய்வது தொடர்பாக நிர்வாகக்குழு கூட்டம் நடத்தப்படவுள்ளது.
கமல்ஹாசன்
2024 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெற்றது. தொடர்ந்து மாநிலங்களை சீட் வழங்கப்படும் என ஒப்பந்தம் கையெழுத்தானது.
தற்போது ஜூலை மாதம் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக் காலம் முடிகிறது. திமுக சார்பில் நான்கு எம்பிக்கள் வரை தேர்வு செய்யப்படலாம். மதிமுக பொதுச் செயலாளர் உட்பட மூன்று பேர் மீண்டும் பதவி கேட்பதாகவும், மேலும் 2 பேர் பதவி கேட்டு அழுத்தம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.
ராஜ்யசபா எம்பி?
இந்நிலையில் சில வாரங்களில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். சில வாரங்களில் திமுக சார்பில் போட்டியிடும் என கூறப்படுகிறது.
எனவே, இது தொடர்பாக கமல்ஹாசன் தலைமையில் விரைவில் நிர்வாகக்குழு கூட்டம் கூட்டி முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், அனைத்து நிர்வாக குழு உறுப்பினர்களும் கமல்ஹாசனை ராஜ்யசபா உறுப்பினராக வற்புறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.