ராஜ்யசபா எம்பியாகும் அண்ணாமலை? எந்த மாநிலத்தில் இருந்து தெரியுமா!
அண்ணாமலை, மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை
கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் அண்ணாமலை. 2020ல் தனது ஐபிஎஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார்.
2021 ஆம் ஆண்டே அவருக்கு தமிழக பாஜக தலைவர் பதவி கிடைத்தது. தொடர்ந்து 2023ல் இவரது அதிரடி பேச்சால் அதிமுகவுடன் கூட்டணி முறிந்தது. மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டதால், அண்ணாமலையை மாற்ற டெல்லி தலைமை முடிவு செய்தது.

இனி சீமான் ஆட்டம்தான்.. இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து கூட்டணிக்கு வந்தால்.. விஜய்க்கு அழைப்பு
ராஜ்யசபா எம்பி?
புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அண்ணாமலைக்கு மாநிலங்களவை எம்பி பதவி கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. அதன்படி, ஆந்திர மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக தெலுங்கு தேசம் கட்சியுடன் பாஜக தலைமை பேசி வருகிறதாம்.. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.
தமிழக பாஜகவில் தலைவர்களாக இருந்தவர்கள் தேசிய அளவிலோ, மத்திய இணையமைச்சர் பதவியிலோ அல்லது மாநில ஆளுநர் பதவிக்கோ நியமிக்கப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.