என்னை நீக்க ஆனந்தன் யார்? செஞ்சது துரோகம் - பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பரபர புகார்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு, சென்னை பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
தொடர்ந்து தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவராக ஆனந்தனும், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மாநில ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
ஆனால், இருவருக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பில் இருந்து பொற்கொடி நீக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியானது. இதனையடுத்து இதற்கு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் ஐபிசி தமிழ் சேனலுக்காக நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அதில் பேசியுள்ள அவர், என்னை நீக்க மாநிலத் தலைவரான ஆனந்தனுக்கு அதிகாரமில்லை. இந்த விவகாரத்தை தலைமைக்கு எடுத்துச் சென்றிருக்கிறேன்.
பொறுமையாக இருக்க அறிவுறுத்தியுள்ளனர். ஆனந்தன் சரியாக செயல்படவில்லை. கட்சி ரீதியாகவும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ரீதியாகவும் அவர் எதுவும் செய்யவில்லை. கொலை வழக்கை பார்த்துக்கொள்வதாக கூறித்தான் இந்த பதவிக்கே வந்தார். நிறைய துரோகம் செய்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆனந்தனுக்கும் தொடர்பு இருப்பதாக எனக்கு சந்தேகம் உள்ளது. இன்றுவரை ஜெயிலில் உள்ளவர்களிடமிருந்து எனக்கு மிரட்டல் வந்துக்கொண்டுதான் இருக்கிறது. அதனையும் அவர் கண்டுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
முழு காணொளி இதோ...