மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டதா?அப்போ இதை பாருங்க - அரசு வெளியிட்ட அறிவுப்பு!
மகளிர் உரிமைத் தொகை திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. ஆனால் அதற்காக நீங்கள் இப்போது விண்ணப்பிக்க முடியாது.
தமிழக அரசு
கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது திமுகவின் தேர்தல் அறிக்கை அறிவிப்புகளில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதைச் செயல்படுத்த, கடந்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், திட்டத்துக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ என்றும் பெயரிட்டார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளன்று இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த சில மாதம் முன்பு வரை 1.15 கோடி பேர்,மகளிர் உரிமைத்தொகை பெற்றனர்; தற்போது மேலும் 1 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு உரிமைத் தொகை தரப்பட்டுள்ளது. தற்பொழுது மகளிர் உரிமைத் தொகை திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.
திட்ட விரிவாக்கம்
அதன்படி தற்போது இந்த திட்டத்தில் உள்ள எல்லா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அதாவது அரசு, கார்ப்பரேஷன் வேலையில் உள்ள பெண்கள் தவிர, மற்ற எல்லோருக்கும் இந்த பணம் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.ஆனால் அதற்காக நீங்கள் இப்போது விண்ணப்பிக்க முடியாது.
ஆனால் ஏற்கனவே பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெறக் கூடிய பெண்களுக்குப் பணம் வழங்கப்படவில்லை. இவர்களுக்குத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் போது அதற்கான அறிவிப்புகள் வரலாம் என்று கூறப்படுகிறது .
மேலும் இதற்காக யாரும் விண்ணப்பிக்கத் தேவை இல்லை என்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.