இனிப்பான செய்தி; ஆகஸ்ட் 14ல் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க தமிழக அரசு உத்தரவு!

M Karunanidhi Government of Tamil Nadu
By Jiyath Aug 09, 2023 02:41 PM GMT
Report

வரும் ஆகஸ்ட் 14ம் தேதி அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் இனிப்பு பொங்கல் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

கலைஞர் பிறந்தநாள்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு அவரின் பிறந்தநாளை நாடே வியக்கும் விதமாக கொண்டாட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இனிப்பான செய்தி; ஆகஸ்ட் 14ல் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க தமிழக அரசு உத்தரவு! | Tn Government Orders Pongal In Schools On Aug 14

இது தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மானியாக் கோரிக்கை மீதான விவாதத்தில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி மாணவ மாணவியருக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் ஜூன் 3ம் தேதி பள்ளி விடுமுறை என்பதால் தேசிய சமூக பாதுகாப்பு தினமான ஆகஸ்ட் 14ம் தேதி பொங்கல் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல்

இந்நிலையில் அனைத்து பள்ளிகளிலும் சமூக நலத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 14ம் தேதி இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டிலுள்ள 43,094 சத்துணவு மையங்களின் மூலம் 44.72லட்சம் மாணவ மாணவியர்களும், 54,439 குழந்தைகள் மையங்களின் மூலம் 14.40 இலட்சம் குழந்தைகளும் பயன்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.