பெண்களுக்கு ரூ.1000; எப்படி விண்ணப்பிப்பது - முழு விவரம் இதோ!
பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது.
உரிமைத்தொகை
அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் எனவும், இந்த 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டத்திற்காக ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, இதனை பெறுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தகுதியான பயனாளிகளின் விவரங்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கிவிட்டது.
விண்ணப்ப படிவம்
இந்நிலையில், உரிமைத் தொகையைப் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், விண்ணப்பதாரரின் பெயர், திருமண நிலை, தொலைபேசி எண், மின் இணைப்பு எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண், வாடகை வீடா அல்லது சொந்த வீடா என்பன உள்ளிட்ட 10 கேள்விகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், 18 வயதுக்கு மேல் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், சொத்து விவரம், நில உடமை மற்றும் வாகன விவரங்கள் உள்ளிட்ட கேள்விகளும் இடம்பெற்றுள்ளன.