இந்த ரேஷன் அட்டைதாரர்களா நீங்கள்? மாதம் ரூ.1000 - விரைவில் அறிவிப்பு

Government of Tamil Nadu
By Sumathi Mar 02, 2023 10:45 AM GMT
Report

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் ஜூன்.3ல் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 மாதம் ரூ.1000

பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன்3ம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த உரிமைத்தொகை வாங்க யாரெல்லாம் தகுதியானவர்கள் என்ற தகவலும் கூறப்படுகிறது.

இந்த ரேஷன் அட்டைதாரர்களா நீங்கள்? மாதம் ரூ.1000 - விரைவில் அறிவிப்பு | Rs 1000 Monthly Assistance For Women Full Details

அதன்படி, PHH என்ற வறுமைக் கோட்டுக்குக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், 35 கிலோஅரிசி வாங்கும் PHAAY குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்கும். அதேநேரத்தில் வயது வரம்பு, கணவரின் ஆண்டு வருமானமும் கணக்கிடப்பட்டு இந்த பயனர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும்,

 ரேஷன் அட்டை

அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காது என்றும் கூறப்படுகிறது. மேலும், புதுமைப்பெண் திட்டத்தில் பயனடையும் கல்லூரி பெண்களின் தாயார்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என்று கூறப்படுகிறது.

தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் அவரவர்களின் வங்கிக்கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்தப்படும். 60 வயதுக்கு மேற்பட்டோர் வாங்கும் முதியோர் உதவித்தொகையிலும் இந்த திட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் சொல்லப்படுகிறது.