சிம்பு அப்படித்தான்; அதனால்தான் அவரை ரொம்ப பிடிக்கும் - மனம் திறந்த ஜோதிகா!
நடிகர் சிம்பு குறித்து ஜோதிகா பகிர்ந்துள்ள தகவல் வைரலாகி வருகிறது.
நடிகர் சிம்பு
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான சிம்பு, தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். மாநாடு படத்தில் கம்பேக் கொடுத்து வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்து படங்களில் நடித்தார்.

தற்போது, தேசிங் பெரியசாமி இயக்கும் STR 48 படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்நிலையில், சிம்பு குறித்து நடிகை ஜோதிகா பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஜோதிகா தகவல்
அதில், மன்மதன் படத்தின் போஸ்டரில் சிம்புவுடன் ஒன்றாக இருக்கும் போட்டோவை பார்த்து, "சிம்பு என்னைவிட சின்ன பையன் தான். நான் நடித்ததில் இளம் ஹீரோ சிம்பு. அவர் ரொம்பவே ஓபன் டைப். அதனாலயே சிம்புவை தனக்கு ரொம்ப புடிக்கும். இப்போது வரை சிம்புவுடன் டச்சில் இருக்கிறேன்.

சில்லுன்னு ஒரு காதல் படம் பார்த்துவிட்டு சிம்பு பாராட்டியிருந்தார். அதன் பின்னர் இருவரும் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தோம். அதில் ஜோடியாக இல்லை என்றாலும் சிம்புவுடன் ஒருசில காட்சிகளில் நடித்தது மறக்கவே முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
1500 நாட்கள் போராட்டம்: இன்னும் தீர்வின்றி தொடரும் மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களின் கோரிக்கை IBC Tamil