கண்டிஷன் போட்ட சிவகுமார்? குடும்பம், குழந்தையை மறந்துட்டு போ.. போட்டுடைத்த ஜோதிகா!

Sumathi
in பிரபலங்கள்Report this article
நடிகை ஜோதிகா சினிமா, குடும்பம் குறித்த பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
நடிகை ஜோதிகா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜோதிகா. விஜய், அஜித், கமல்ஹாசன், ரஜினி என டாப் ஹீரோக்களுடன் தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக்கொண்டார்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா 2015ல் ரீ-எண்ட்ரி கொடுத்தார். அதன்பின் தொடர்ந்து சிறந்த கதை களத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
சினிமாவுக்கு மறுப்பா?
இந்நிலையில், அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், சினிமாவில் நடிக்கக் கூடாது என மாமா சிவகுமார் உங்களை தடுத்தாரா என்கிற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், அந்த வீட்டில் தனக்கு ரொம்ப சப்போர்ட்டாக இருந்ததே என் அப்பா சிவகுமார் தான்.
ஷூட்டிங்கின் போது குடும்பம், குழந்தைகள் என அனைத்தையும் மறந்து விட்டு வேலை இடத்தில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும் என்றார். மம்மூட்டியுடன் நடித்த காதல் படத்தை பிரத்யேகமாக தனது நண்பர்களுக்கு போட்டுக் காட்டி ரசித்துப் பார்த்து பாராட்டினார். கோவிட் நேரத்தில் என் பெற்றோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
அடிக்கடி மும்பைக்கு விமானத்தின் மூலம் பறக்கவும் முடியவில்லை. சூர்யாவிடம் சொன்னதும் அவரும் ஓகே சொல்லி விட்டு மும்பையில் குடியேற சம்மதித்தார். அதற்காக வீட்டில் எந்த பிரச்சனையும் நடக்கவில்லை. பண்டிகை நாட்கள் என்றால் ஒன்றாக கூடி சந்தோஷமாக கொண்டாடி வருகிறோம். இது தற்காலிகமானது தான். மீண்டும் சென்னைக்கு வந்து விடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.