அந்த நடிகரோடு மட்டும் நீ நடிக்க கூடாது - மனைவி ஜோதிகாவுக்கு கண்டிஷன் போட்ட நடிகர் சூர்யா
பிரபல மூன்றெழுத்து நடிகருடன் நடிக்க கூடாது என மனைவி ஜோதிகாவுக்கு நடிகர் சூர்யா கண்டிஷன் போட்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் அறிமுகம்
வாலி திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா.
இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், கமல்ஹாசன், ரஜினி என டாப் ஹீரோக்களுடன் தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக மாறினார்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்த ஜோதிகா, நடிகர் சூர்யாவுடன் படங்களில் நடித்து வந்தார்.
சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் இணைந்து நடித்த காக்க காக்க திரைப்படம் அனைவரையும் கவர்ந்தது.
சூர்யாவுடன் காதல் திருமணம்
இதை தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கும், ஜோதிக்காவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தேவ் மற்றும் தியா என்ற குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்துக்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
பின்னர் ராட்சசி, தம்பி, உடன்பிறப்பே போன்ற படங்களில் பெரும்பாலும் குடும்ப பாங்கான ரோல்களில் மட்டும் நடித்து வந்தார்.
இது மட்டுமல்லாமல் ஜோதிகா, சூர்யா இணைந்து 2D Entertainment தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்து வெற்றி ஜோடிகளாக வலம் வருகின்றனர்.
ஜோதிகாவுக்கு கண்டிஷன் போட்ட சூர்யா
இந்த நிலையில், சூர்யா, ஜோதிகாவை காதலிக்க ஆரம்பத்திலிருந்தே ஜோதிகா யாருடன் நடிக்க வேண்டும், யாருடன் நடிக்க கூடாது என்ற சூர்யாவின் அட்வைஸ்களை கேட்டு தான் படங்களில் நடிக்க கமிட்டாவார்.
அந்த வகையில் பிரபல மூன்றெழுத்து நடிகருடன் நடிக்க கமிட்டான ஜோதிகாவை அந்த நடிகருடன் நடிக்க விடாமல் சூர்யா தடுத்துள்ளார்.
2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சூர்யா, ஜோதிக்காவுக்கு திருமணமானது. அந்த சமயத்தில் 5 படங்களில் கமிட்டான ஜோதிகா அனைத்து பட வாய்ப்புகளையும் உதறி தள்ளிவிட்டார்.
அதில் யாராடி நீ மோகினி திரைப்படமும் ஒன்று.பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இத்திரைப்படத்தில் தனுஷ் மற்றும் நயன்தாராவின் கேரியரில் ஒரு முக்கியமான படமாக அமைந்தது. நயன்தாராவுக்கு முன்னர் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த ஜோதிகா தான் என்று கூறப்படுகிறது.
தனுஷுடன் இணைந்து நடித்த பல நடிகைகள் மார்க்கெட் இல்லாமலும் சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும், சூர்யா அப்படத்தில் அவருடன் நடிக்கவிடவில்லை எனவும் சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
You May Like This Video

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
