கேவலமான கேள்வி கேட்டாங்க; நல்லா இருந்தா நானே பண்ணுவேன் - நடிகை ஜோதிகா பகீர்!
கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிப்பது குறித்து நடிகை ஜோதிகா பேசியுள்ளார்.
நடிகை ஜோதிகா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஜோதிகா. இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். ரஜினி, விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோதிகா இனைந்து நடித்துள்ளார்.

படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போதே கடந்த 2004ம் ஆண்டு நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் சினிமாவில் இருந்து விலகியிருந்த ஜோதிகா, 36 வயதினிலே என்ற திரைப்படம் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் காதல் தி கோர் திரைப்படம் வெளியானது. இந்த படம் தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஜோதிகா பேட்டியளித்திருந்தார்.
பேட்டி
அதில் அவர் பேசியதாவது "நான் கிட்டத்தட்ட 25 வருடங்களாக இந்த சினிமா துறையில் இருக்கிறேன். எனக்கு மிகவும் வருத்தமான ஒரு விஷயம் இருக்கிறது. சில பெரிய படங்களில் என்னை நடிக்கச் சொல்லி கேட்டார்கள்.

ஆனால் அந்த படங்களில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு பெரிதான முக்கியத்துவமே இல்லை. பலமுறை இப்படியான கதாபாத்திரத்திற்கு ஏன் என்னை கேட்கிறீர்கள் என்று சந்திக்க வரும் இயக்குநர்களிடம் கேட்டிருக்கிறேன். என்னிடம் வந்து இரண்டு சீன் கொடுங்கள் என்றெல்லாம் கேட்பார்கள்.
அது உண்மையில் எவ்வளவு கேவலமான கேள்வி?. இரண்டு மூன்று சீன்கள் நன்றாக இருந்தால் நானே அந்த படங்களில் நடிப்பேன். ஆனால் எனக்கு படத்தில் சீன்கள் எங்கே..? நான் ஏதோ சும்மா கதாநாயகன் பக்கத்திலிருந்து கொண்டு செல்ல முடியாதல்லவா? இந்த இடத்தில் நான் அவமதிக்க பட்டதாக உணர்கிறேன்” என்று பேசியுள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் சபேஸ்வரனின் மறைவு ஈழத் தமிழர் ஊடகத் துறைக்குப் பேரழிப்பு - சிறீதரன் எம்.பி! IBC Tamil
மிகப் பெரிய கப்பம் வசூலிப்பவர் என்ற பெயரையும் கோட்டாபயவுக்கு பெற்றுக்கொடுத்தது அடுத்த குற்றச்சாட்டு IBC Tamil