இந்த ஒரு காரணம் தான்.. விஜய்க்கு ஜோடியாக நடிக்க மறுப்பு தெரிவித்த ஜோதிகா!

Vijay Jyothika Tamil Actors Tamil Actress
By Vinothini Sep 03, 2023 03:00 PM GMT
Report

நடிகை ஜோதிகா விஜயின் 2 படங்களை மறுத்ததன் காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 68

விஜய் நடிப்பில் தயாரித்து வரும் லியோ படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதேநேரம் லியோவை விடவும் விஜய்யின் தளபதி 68 மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாம்.

actress-jyothika-refused-vijay-movie

தளபதி 68 படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, மாதவன், ப்ரியங்கா மோகன் ஆகியோரும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவை நடிக்க அழைத்துள்ளனர், ஆனால் அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.

வெளியான தகவல்

இந்நிலையில், அட்லீ இயக்கிய மெர்சல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால், அதற்கு ஜோதிகா தரப்பில் இருந்து நோ சொன்னதாகக் கூறப்படுகிறது.

actress-jyothika-refused-vijay-movie

இதில் அப்பா விஜய் கேரக்டருக்கு ஜோடியாக நடிப்பதற்காக கூறப்படுகிறது, அம்மாவாக நடிப்பதில் பிரச்சினை இல்லை, ஆனால், விஜய்க்கு அம்மாவாக நடிக்க முடியாது என ஜோதிகா நோ சொல்லிவிட்டாராம்.

இதே காரணத்தால் தான் தளபதி 68 படத்திலும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தற்பொழுது இணையத்தில் பரவி வருகிறது.