ஓவர் ஆக்ட் தான் பண்ணேன், ஒர்கவுட் ஆயிடுச்சு - நடிகை ஜோதிகா ஓபன் டாக்!
நடிகை ஜோதிகா சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
ஜோதிகா
பிரபல நடிகை ஜோதிகா, பல படங்களில் நடித்து தனது ஆக்டிங்கால் பல ரசிகர்களை கவர்ந்தவர்.
இவர் பிரபல நடிகரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் விஜயுடன் நடித்த குஷி படத்தின் அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், "படத்தின் கதை பற்றி இயக்குநர் சொல்லும்போது பழைய காலத்து ஹீரோக்கள் போல கொஞ்சம் அதிகமாகவே நடிக்க வேண்டும். ஈகோ கொண்ட அனைவருமே கோபமாக மற்றவர்களை பார்த்து லுக் விடுவார்கள்.
ஆனால் குஷியில் வேண்டுமென்றே அது கொஞ்சம் ஓவராக இருக்க வேண்டும் என நினைத்தேன்" என்று கூறினார்.
ஓவர் ஆக்டிங்
இதனை தொடர்ந்து, அவர் பேசியதில், "இதுகுறித்து பலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்ததாகவே நினைக்கிறேன்.
முகவரி போன்ற மற்ற படங்களில் அப்படி நடிக்கவில்லை. தமிழ் எனக்கு அந்த அளவிற்கு தெரியாததால் அதை பேலன்ஸ் செய்வதற்கு என்பதால் சில சமயங்களில் நான் ஓவர் ஆக்டிங் செய்து நடித்திருப்பேன்.
ஒரு நடிகையாக நான் சரியாக செய்கிறேனா இல்லையா என்பது தெரியாததால் கொஞ்சம் எக்ஸ்பிரஷன் அதிகமாக கொடுத்து அந்த இடத்தை நிரப்ப முயற்சிப்பதுண்டு.
ஆனால் ரசிகர்கள் அதை விரும்புவதாலும் எனது அதிர்ஷ்டத்தாலும் அது நல்லபடியாக ஒர்க் அவுட் ஆகிவிட்டது" என்று கூறியுள்ளார்.
இவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி ட்ரெண்ட் ஆகி வருகிறது.